Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 16 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் இரவு நேரத்தில் வீடு உடைத்து திருடியமை மற்றும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 28 வயதுடைய பெண்ணொருவரின் கையைப் பிடித்தமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய நபருக்கு, ஏழு மாத கால கட்டாய சிறைதண்டனை விதித்த திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, அவருக்கு, பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்ததுடன், அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து, நேற்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.
கிண்ணியா மதினாநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்தநபர், கிண்ணியாப் பிரதேசத்தில் கடந்த வருடம் இரவு நேரத்தில் வீடு உடைத்து தொலைக்காட்டிப் பெட்டி மற்றும் வீட்டு உபகரணங்கள் திருடியுள்ளார்.
அத்துடன், கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, 28 வயதுடைய பெண்ணொருவரின் கையைப் பிடித்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபருக்கெதிராக கிண்ணியாப் பொலிஸாரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்தநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .