Niroshini / 2015 நவம்பர் 05 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
வலயக் கல்வி அலுவலகத்தின் விசேட அறிவித்தல் இன்றி அல்லது அனுமதி பெறாமல் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் அலுவலகத்துக்கு சமூகமளிக்கும் அதிபர்,ஆசிரியர்கள் மேலதிக விசாரணைக்குட்படுத்தப்படுத்துவதற்கு கிண்ணியா வலயக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்கான் இன்று (5) சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
காரியாலய சேவைகளைப் பெறும் பொருட்டு எமது வலயக் கல்வி அலுவலகத்துக்கு சமூகம் அளிக்கும் அதிபர்,ஆசிரியர்கள் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் சமூகமளித்தல் வேண்டும்.(பாடசாலை நேரங்களைத் தவிர்த்தல் சிறப்பானதாகும்.
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை தவிர்ந்து ஏனைய நாட்களில் விசேட தேவையின்றி வருகை தரும் எவருக்கும் அலுவலக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அவ்வாறு சமூகமளிப்போருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago