2025 மே 05, திங்கட்கிழமை

அதிபர், பிரதி அதிபரை மீண்டும் நியமிக்குமாறு மகஜர்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய், அக்ரபோதி தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபரை மீண்டும் அதே பாடசாலைக்கு நியமிக்குமாறுகோரி,  கிழக்குமாகாண ஆளுநருக்கும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் நேற்று முன்தினம் (18)  மாலை மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

தங்களது பாடசாலையில், 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், சிறந்த முறையில் பாடசாலை முன்னேறிக் கொண்டுவந்த நிலையில், அரசியல் தலையீடு காரணமாக அதிபர், பிரதி அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னாள் ஒன்றுகூடி இடமாற்றம் வழங்கப்பட்ட அதிபர், பிரதி அதிபரை மீண்டும் இப்பாடசாலைக்கு நியமித்து தருமாறுகோரி மகஜர் ஒன்றினை வழங்கிவைத்தனர்.

இதேவேளை, இரண்டு வாரத்திற்குள் அதிபர், பிரதி அதிபரை நியமிக்குமாறும் அவ்வாறு நியமிக்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X