2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

அதிபர்கள் உள்ளீர்ப்பு குறித்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு வரவேற்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

போட்டிப் பரீட்சை இன்றி,  நேர்முகப் பரீட்சையின் ஊடாக அதிபர்களை உள்ளீர்ப்புச் செய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை வரவேற்பதாக கிழக்கு தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மங்களசந்திர சேபநாயகம் தெரிவித்தார்

தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, இலங்கை அதிபர் சேவை தரம் IIIக்குப் பொருத்தமான ஆசிரியர்களை போட்டிப்பரீட்சை இன்றி, நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம், சுனாமி, கொரோனா போன்ற அனர்த்தங்களால் ஒரு கட்டத்தில் எத்தனையோ புறநகர் பாடசாலைகளை நடத்த ஆளணி இன்றி இழுத்து மூடிவிடும் அபாயம் இருந்தபோது, பாடசாலைகளில் கடமை புரிந்து சிரேஷ்ட ஆசிரியர்கள் கை கொடுத்தனர். 

“எனவே, இவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கின்றோம். இந்த நியமனத்தை அரசியலாக மாற்றாது, பொது நோக்கம் சார்ந்ததாக வழங்குவார்களாயின், இதில் எந்த ஆட்சேபனையும் எமது சங்கத்துக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X