2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அத்தியாவசியத்துக்கு அனுமதி

Princiya Dixci   / 2021 மே 19 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்டங்களுக்கிடையே “அத்தியாவசிய சேவை” மற்றும் “அத்தியவசிய தேவை” நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை, திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரளவின் வழிகாட்டலுக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதன்படி, மேற்படி அனுமதிக்கான விண்ணப் படிவத்தை பிரதேச செயலகங்களில் பெற்று பூர்த்திசெய்து, விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களிடம் சிபாரிசைப் பெற்று, மாவட்டச் செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.

அதன்பின்னர் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிக்கு உரிய பயண அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களது அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X