Princiya Dixci / 2021 மே 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தற்போது கிண்ணியா பிரதேசத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
கிண்ணியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதைக் கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்புக் குழுவின் கூட்டம், இன்று (05) அவசரமாகக. கூடியது.
இதில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை அமுல்படுத்தப்படும் வகையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
1. அனைத்து மதஸ்தலங்களும் உடனடியாக மூடப்படும். அத்துடன், வீடுகளில் கூட்டாக நடத்தப்படும் அனைத்து வழிபாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
2. அத்தியவசிய தேவைகளுடைய மருந்தகம், பல்பொருள் அங்காடி, மீன், இறைச்சிக்கடை மற்றும் மரக்கறிக் கடைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்படும். அத்துடன், வீடுகளில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது.
3. வெளியூர்களுக்கு செல்வதற்கு முற்றாக தடை. அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்றுச் செல்ல முடியும்.
4. அனைத்துப் போக்குவரத்து வாகனங்களிலும் 50 சதவீதமானோர் மட்டுமே பயணிக்கலாம்.
5. அத்தியவசிய தேவைகளுக்கான அலுவலகங்கள் தவிர மற்றைய அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்படவேண்டும்.
6. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் அனைத்தையும் மிகக் கவனமாக பின்பற்றுதல்.
இதுபோன்ற பல்வேறு தீர்மானங்கள் மேற்கொண்டதோடு, உடனடியாக செயலிலும் இறங்கி, வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரிகள், வர்த்தக சம்மேளனத்தினர் கலந்துகொண்டனர்.
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025