2025 மே 01, வியாழக்கிழமை

அந் நஹார் பாடசாலையில் இரு கட்டடங்கள் திறந்துவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கல்வியமைச்சால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் செயற்றிட்டத்தின் ஊடாக, திருகோணமலை – மூதூர், அந் நஹார் மகளிர் மஹா வித்தியாலயத்தில், இரு கட்டடங்கள், நேற்று (09) திறந்துவைக்கப்பட்டன.

கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூடம், ஆரம்பக் கற்றல் வள நிலையம் ஆகிய கட்டடங்களே, துறை முகங்கள், கப்பற்றுறைப் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபினால் திறந்துவைக்கப்பட்டன.

இதில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாசீம், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா நஸார், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், வட்டார வேட்பாளர் சியான்,  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .