2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் அகழ்ந்தவர் கைது

Thipaan   / 2016 ஜூன் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட் 

அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  இளைஞரொருவரைக் கைதுசெய்து பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதோடு, மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தையும் கையகப்படுத்தியுள்ளதாக, புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மகேசன் புர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய  இளைஞரே, நேற்று இரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபர், யான் ஓய ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிவந்த வேளை, இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புல்மோட்டை சிறு குற்றத்தடுப்பு பொலிஸார், இவரை சோதனை செய்தபோது, அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிய குற்றத்துக்காக இவரைக் கைது செய்துள்ளனர்.

அந்த இளைஞனை, இன்று  செவ்வாய்கிழமை (28) குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக புல்மோட்டை பிராந்திய சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X