2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டங்கள் அகற்றப்பட்டன

Thipaan   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தின்  வடக்கு கடலோரங்களில்  அனுமதியின்றி கட்டப்பட்ட விடுதி மற்றும் மீன் வாடிக்கட்டடங்கள், இன்று செவ்வாய்க்கிழமை (18) இடித்து அகற்றப்பட்டன.

இக்கட்டடங்கள், கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதுடன், பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதாகவும்  கரையோரம் பேணல் மற்றும் மூலவளத்திணைக்கள அபிவிருத்தி அதிகாரி திருமதி. திருஞானச் செல்வம் தெரிவித்தார்.

நிலாவெளிப்பகுதியில் இரண்டு உல்லாச  விடுதிகளின் கட்டடங்களும் புல்மோட்டைப் பகுதியில் ஒரு மீன் வாடியும் நிலாவெளி ஜாயா நகரில் ஒரு மீன் வாடியும் இன்றைய தினம் அகற்றப்பட்டன.

இந்நடவடிக்கைகளை கொழும்பில் இருந்து வருகைதந்த அதிகாரிகள் கண்காணித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X