Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்தின் சமூக அபிவிருத்தியில் நலிவுற்ற பிரதேசங்களை முன்னேற்றி வழங்கும் திட்டத்தில் பெரும்பான்மையினப் பிரதேசம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகம் என்ற அமெரிக்க நாட்டு அலுவலகத்தினுடைய திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள 08 தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு பெரும்பான்மையினப் பாடசாலையும் தெரிவு செய்யப்படாமை தொடர்பில் கவலை அளிப்பதுடன், இது முறையான வளப்பங்கீடாக அமையாது' என்றார்.
'மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினப் பாடசாலைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இங்கு பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுவதுடன், இதர தேவைகளும் காணப்படுகின்றன' எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து உரையாற்றிய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்; சி.தண்டாயுதபாணி, 'கிழக்கு மாகாணசபையினால் இத்திட்டம் மேற்கொள்ளப்படாத போதிலும், மாகாண ஆளுநரின் ஆலோசனையுடன் கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டமாக இது உள்ளது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுளவின் இந்தக் கோரிக்கை நியாயமானது. இந்த விடயம் தொடர்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே எனக்கு தெரியவந்தது. இந்தப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க நாட்டின் மேற்படி திட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன. இரண்டாம் கட்டத்தில் இதற்கான அபிவிருத்திகளை செயற்படுத்தப்படுமென்பதுடன், இதன்போது பெரும்பான்மையினப் பிரதேசம் கவனத்தில் கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026