Janu / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானினால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path - Kinniya) அமைப்பதற்கும் அதனுடன் இணைந்து அப்பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேள்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (31) அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளனர் .
இதன்போது இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதடற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் விமல்ராஜ், காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அ . அச்சுதன்

5 hours ago
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
15 Nov 2025