Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 29 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் பிராந்திய நிலையத்தினால் திருகோணமலை மாவட்டம், சேருவில பிரதேச செயலகப்பிரிவில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கான அடிப்படை சட்டங்களும் நீதிமன்ற நடைமுறைகளும் என்ற தொனிப் பொருளில் ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி நெறி, நேற்று திங்கட்கிழமை சேருவில பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.பக்கீர் அறபாத் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியில், பிரதான வளவாளர்களாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் பிராந்திய சட்டத்தரணிகளான மொஹமட் லத்தீப் பைஸர், அனஸ் றுக்சானா பானு, நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் கோபிகண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கையில் நடைமுறையில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் துணைநீதிமன்ற கட்டமைப்புகளான குவாசி நீதிமன்றம், தொழில் நியாயசபை மற்றும் இணக்க சபை முறைமை தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, நீதிமன்றம் ஒன்றின் செயற்பாடுகளும் நீதிமன்ற நடைமுறைகளின் பொதுத்துறை ஊழியர்களின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெளிவூட்டப்பட்டது.
நீதிமன்ற செயற்பாடுகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொதுத்துறை ஊழியர்கள் கடந்த காலங்களில் போதிய தெளிவின்மை காரணமாக அறிக்கைகள் வழங்கள், அழைப்புக்கட்டளையை சேர்ப்பித்தல் மற்றும் பிடிவிராந்து தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பன தொடர்பில் போதிய தெளிவு அற்று காணப்பட்டமையை அடிப்படையாக கொண்டு இத்தகைய பயிற்சி நெறி ஒன்று வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago