2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்துறையில் நியமனம் வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தங்களின் சேவையை கருத்திற்கொண்டு அரசாங்கத் துறையில் தங்களுக்கு நியமனம் வழங்குமாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றும் பெரும்பான்மையினத் தொண்டர் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றும் பெரும்பான்மையினத் தொண்டர் ஆசிரியர்களுக்குமிடையிலான சந்திப்பு, மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த பல வருடகாலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல், தாங்கள் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பித்து வருவதாக இந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .