Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மார்ச் 08 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று (07) மாலை பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 20 சதவீதமாகவும் அதிகபட்சமாக 50 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய, நேற்று முதல் மின் கட்டணத்தை குறைக்குமாறு, ஆளுநர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago