Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுடைய இறைமையைப் பாதுகாக்கக்கூடிய இலங்கையின் உச்சகட்ட அதிகாரமுடையச் சட்டமான அரசமைப்பு தொடர்பான தெளிவை, அனைவரும் பெற்றிருத்தல் அவசியமென, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலொன்று, திருகோணமலை கச்சேரியில், இன்று (06) நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மேற்குலக நாடுகள் சிலவற்றில், மத்திய அரசாங்கத்துக்கு அடுத்தபடியான அதிகாரம் மிக்க கட்டமைப்புக்களாக விளங்குவது உள்ளுராட்சி மன்றங்களே என்றும் அவ்வாறான உள்ளுராட்சி மன்றங்கள், பொதுமக்களுக்குத் தேவையான நல்ல பல தீர்மானங்களை எடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றதென்றும் கூறினார்.
வெளிநாடுகளில், ஊழல், துஷ்பிரயோகங்கள் காணப்படுவது அறிதென்றும் அவ்வாறு காணப்பட்டாலும் கூட, அவற்றுக்கான தண்டனைச் சட்டங்கள் மிகக் கடுமையாக காணப்படுகின்றன எனவும், அரசாங்க அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
4 hours ago