2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

“அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அப்துல்சலாம் யாசீம்

அரசியலுக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள் பெண்களை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நன்று அறிந்து உள்ளோம்  என தெரிவித்துள்ள சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி, அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே  அதிகம் காணப்படுகின்றனர் என்றார். 

பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தறிவோம் என்ற  தொல்பொருளில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தினால்  வெகுஜன ஊடக ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் ஊடக கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள மல்லிகா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்விடத்தை குறிப்பிட்டார்.

பெண்களை  வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேறு நாடுகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகளவில் இருப்பதாகவும் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விகிதாசாரத்தில் பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் எப்போதும் பெண்கள் சமையலறையில் இருப்பதை மட்டும் விரும்பவில்லை எனவும் அங்கு பங்கேற்ற பெண்கள் அதிக அளவில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X