Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவுக்கு விண்ணப்பியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்கு மாகாண தலைவராக நியமிக்கப்பட்டபின் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தால் அரசியல் பழிவாங்கல்ளுக்கு இலக்காகி, நல்லாட்சி அரசு காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கான நிவாரணத்தை வேண்டி விண்ணப்பித்தும் தீர்வு கிடைக்காதவர்களும் அதேபோன்று, தற்போதைய அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்ளுக்கு உள்ளாகியவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவுக்கு விண்ணப்பிப்பதற்கான தமது ஆவணங்களை சமர்பிக்கப்பவும்.
“எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தில், அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்படடவர்களுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
“ஆவணங்களை சமர்பிப்பதுக்கான முகவரி உள்ளிட்ட விடயங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
“அத்துடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 minute ago
18 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
55 minute ago