2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அறிவு சார் செயலமர்வு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆரோக்கியமான அறிவு மற்றும் பாலியல் ரீதியான சட்ட திட்டங்களை எவ்வாறு முறையாக தெரிந்திருப்பது பற்றிய செயலமர்வொன்று, பாடசாலை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது.

குறித்த செயலமர்வை, கிண்ணியா பிரதேச செயலக உளவளத் துணை பிரிவு, போதை தடுப்பு பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தன. இதில் வளவாளராக கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்துகொண்டார்.

பாடசாலை பருவத்தில் மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதில் பாலியல் ரீதியான முறையற்ற தகாத உறவு, காதல் மற்றும் பயம் போன்ற உளச் சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் உள்ளன. இதில் இருந்து விழிப்புணர்வு பெறுவதற்கான ஓர் ஆரம்ப கட்ட விழிப்புணர்வாகவே இந்தச் செயலமர்வு அமைந்தது.

16 வயதுக்கு உட்பட்டவர்கள் தகாத பாலிதல் ரீதியான உறவில் ஈடுபட்டால் 10 வருட சிறைத் தண்டனை என்பதை சட்டம் சொல்கிறது போன்ற பல விடயங்களை டொக்டர் நஸ்மி இதன்போது மாணவர்களுக்குத் தெளிவூட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X