Princiya Dixci / 2021 மே 09 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள், கிழக்கு மாகாண இணையத்தளமான EP.gov.lk இல் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டுக்கான விண்ணப்பப் படிவமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொவிட் -19 சூழ்நிலை காரணமாக, கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயிருந்த நிலையில், இம்முறை 2021ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலிகமாக இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025