Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 08 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (08) அவர் கருத்துரைக்கையில்,
“நாட்டில் தற்போது அவசர கால சட்டம் நடை மறைப்படுத்தப்பட்டிருப்பது புதிய விடயமல்ல. தனது சகோதரை பாதுகாக்க அரசியல் அமைப்பை மாற்றிய இவர்களுக்கு இதுவொரு விடயமல்ல. தனது குடும்பத்தை பாதுகாக்கவே இந்ந அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
“மக்களை போராட்டத்தை திசை திருப்பவே பிரதமர் பதவி விலகுவார் என்ற செய்தியை பரப்பி நாடகமாடுகிறார்கள்.
“மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும், ராஜபக்ஷர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தங்களின் அதிகாரத்தை தக்கவைக்கவே நினைக்கிறார்கள்.
“இடைக்கால அரசாங்கம் என்பது ராஜபக்ஷர்களினதும் மொட்டுக் கட்சியினதும் கீழ் பிரதமரை ஏற்று அமைப்பதை ஐக்கிய மக்கள் சக்தி விரும்பாது. மீண்டும் விமல் மற்றும் உதயன் கம்மன்பில போன்றவர்களுடன் ஆட்சியை கொண்டு செல்வதா என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
“பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்துவது என்ற கோரிக்கையே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடகவுள்ளது” என்றார்.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago