2026 மார்ச் 25, புதன்கிழமை

ஆசிரிய ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி,ஏ.எம்.ஏ.பரீத்,எப்.முபாரக்    

ஆசிரியர் ஆலோசர்களாக தற்காலிமாக பணியாற்றிவரும் தங்களை நிரந்தர நியமனத்துக்குள் உள்வாங்குமாறு கோரி கிழக்கு மாகாண வலயக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று புதன்கிழமை  திருகோணமலை ஆளுநர் செயலகத்துக்கு முன்பாகவுள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய கல்வி வலயங்களில் தற்காலிமாக கடமையாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .