Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக எட்டு வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.சி. நஸார் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“உங்கள் பாடசாலையில் 2016.12.31ஆம் திகதி வரை எட்டு வருடங்கள் சேவைக் காலத்தைக் கொண்ட ஆசிரியர்களை 2017ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்வதற்காக குறித்த ஆசிரியர்களின் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் திட்டமிடல் பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறித்த ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்கள் சரியாக முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்து, அதிபரினால் உறுதிப்படுத்தி, விண்ணப்பங்களின் தொகையைக் குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.
எட்டு வருடங்கள் பூர்த்தி செய்த எந்த ஆசிரியரது விண்ணப்பமாவது அனுப்பி வைக்கப்படாமல், பின்னர் எமக்குத் தெரியவந்தால், பதிலாள் தரப்படாமல் குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
28 Jul 2025