2025 மே 15, வியாழக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 மே 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கோட்டத்திலுள்ள சிறாஜ் இசுறு கலவன் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, அவ்வித்தியாலய மாணவர்களும் பழைய மாணவர்களும் தமது பெற்றோருடன் இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

539  மாணவர்கள் கல்வி பயின்று வரும் இந்த வித்தியாலயத்தில் 16 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனரெனவும் இன்னும் 20  ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தமிழ்  ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையே இந்த வித்தியாலயத்தில் நிலவுதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், பல தடவைகள் கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .