Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தில் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பாடசாலை ரீதியாக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 24ஆம் திகதியுடன் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் தமிழ், சிங்களம் ஆகிய மொழி மூலம் இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்டும் என்றும் அவர் தெரிவித்தார்.18 முதல் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இந்த ஆசிரியர் வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழ் மொழி, இரண்டாம் மொழி சிங்களம், வரலாறும் குடியுரிமைக்கல்வியும், உடற்கல்வி, சிங்களமொழி விவசாயம், பௌத்த நாகரிகம், நாடகமும் அரங்கியலும், நடனம், சங்கீதம், ஆரம்பக்கல்வி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நிலுவுகின்றன.
எழுத்துப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை ஆகிய பரீட்சைகளின் மொத்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டும் விண்ணப்பிக்கும் பாடங்கள், வெற்றிடம் நிலவும் பாடசாலைகள் என்பவற்றை கருத்தில் கொண்டும் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பங்களை, செயலாளர் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு, 198. உட்துறைமுக வீதி, கிழக்கு மாகாணம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago