2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை - புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி, மாணவர்களும் பெற்றோர்களும், நேற்று (16) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் பிரதான கதவை மூடி பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

திறமையான மாணவர்கள் பலர் உள்ளோம். ஆனால், வழிநடத்த ஆசிரியர்கள்தான் இல்லை. 1,200 மாணவர்களுக்கு 24 ஆசிரியர்கள் எந்த விதத்தில் நியாயம்? போன்ற பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

1905 ஆம் ஆண்டு புல்மோட்டையில் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருக்கும் இக்கல்லூரியில்  64 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 24 ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரனைக் கேட்டபோது, “இக்கல்லூரிக்கு 49 ஆசிரியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட போதும் 29 ஆசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர்.

“நேற்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பட்டதாரி நியமனம் பெற்ற 07 அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை நியமித்துள்ளதுடன், திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை அறபா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X