Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் வலயத்துக்குட்பட்ட தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் நீண்டகாலமாக முக்கியமான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமையால் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக, பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலைக்கு நீண்டகாலமாக, பயிற்றப்பட்ட கணித ஆசிரியர் ஒருவர் கூட இல்லையெனவும் தற்போது ஆரம்பக்கல்வி ஆசிரியராலேயே கணிதப்பாடம் கற்பிக்கப்படும் நிலை உள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயர்தர தொழிநுட்பப்பிரிவுக்கு இதுவரை ஓர் ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லையெனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் நிவர்த்திக்கப்படாது புறக்கனிக்கப்படுவதாக, பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இப்பாடசாலையின் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்த உதவுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .