Thipaan / 2015 நவம்பர் 21 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை ஆணொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கடற்கரைப்பகுதியில் சடலமொன்றைக் கண்ட பொதுமக்கள், திருகோணமலை துறைமுகப்பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை திருகோணமலை தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் 48வயது மதிக்கத்தக்க ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் கடலுக்குச் குளிக்கச் சென்ற வேளையில் நீரிழ் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago