Princiya Dixci / 2021 மார்ச் 18 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு இருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (18) மாலை அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இதன்போது அங்கிருந்து எதுவிதத் தடையங்களும் மீட்கப்படவில்லை.
மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஐ.முபாரிஸ் மேற்பார்வையில் இந்த அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்ச, இராணுவ அதிகாரிகள், பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த இடத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவமனை இருந்ததுடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கைக் கடற்படை முகாம் இருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025