2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆலங்குள துயிலும் இல்லத்தின் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு வாக்கு மூலம்

Editorial   / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை -  சம்பூர், ஆலங்குள துயிலும் இல்லத்தின் மாவீரர் நாள் நிகழ்வேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர், சம்பூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) தமது வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.

மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் க.பண்பரசன், பொருளாளரும் மூதூர் பிரதேச சபையின் உறுப்பினருமான ந.கரிகரகுமார் ஆகியோரே,  சம்பூர் பொலிஸாரல் அழைப்பு விடுக்கப்பட்டதற்கிணங்க தமது வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவ்விருவரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக, சம்பூர் ஆலங்குளத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் தாம் கேட்டதாகத் தெரிவித்தனர். 

அத்துடன், கொரோனா வைரஸ் பரவில் நிலமையைக் கருத்தில்கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமேனும் அனுமதி வழங்குமாறும் கோரியதாகவும் தெரிவித்தனர். 

அதற்கு, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாகவும் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X