2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆலங்கேணியில் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர், தீஷான் அஹமட்

கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து, 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் கவனயீர்ப்புப் போராட்டம், கிண்ணியா - ஆலங்கேணி பிரதேசத்தில் நேற்று (20) நடைபெற்றது.

51ஆவது நாள் போராட்டமாக திருகோணமலை மாவட்ட மக்கள், சிவில் மற்றும் பெண்கள் அமைப்புகள் இணைந்து எமக்கு இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “நடமாடுவது எங்கள் உரிமை”, “பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை” மற்றும் “ஒன்று கூடுவது எங்கள் உரிமை” என கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகைதந்ததுடன், தங்களின் உரிமை கோரிக்கையையும் முன்வைத்தனர்.

வட, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய பதாகைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .