Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய மடத் திருத்தப் பணிக்கு எவரிடமும் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இல்லை என, மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (29), அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'எமது சிவ பூமியான திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் இந்துகளின் உயிர் மூச்சான பஞ்ச ஸ்வரங்களில் ஒன்றாகும்.
'இந்த ஆலயத்தின் மடத்தைத் திருத்துவதற்கான முழு உரிமையும் ஆலய அறங்காவளருக்கு உள்ளது. இதற்கு எவரிடமும் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இல்லை என நாங்கள் நம்புகின்றோம். அந்த வகையில் கோணேஸ்வரர் ஆலய அறங்காவலரான பழம்பெரும் புத்திஜீவியும் கவி எழுத்தாளருமான, இறைபற்றாளருமான அருள் சுப்பிரணியம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்படுவதைக் கண்டிப்பதோடு, வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
'இந்த விடயம் இந்து மக்களின் மனதை புண்படவைப்பதுடன், அரசாங்கம் மேற்கொள்கின்ற இன, மத நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கும் குந்தகமாக அமையலாம்.
'எனவே, இதை மேற்கொள்ள முயற்சிப்பவர்கள் பரந்தளவில் சிந்தித்துச் செயல்பட்டால் ஆரோக்கியமாக அமையும் என நாம் கருதுகின்றோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025