2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஆள்மாராட்டம் செய்தவருக்குப் பிணை

Thipaan   / 2016 ஜூலை 30 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலையில், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த நபரை, இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவர்.

குறித்த சந்தேகநபர், வியாழக்கிழமை (28) இடம்பெற்ற பரீட்சையின் போது, நண்பரின் அடையாள அட்டையைக் கொண்டு சென்று பரீட்சை எழுதிய போதே, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பரீட்சை மேற்பார்வையாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேகநபர், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை(29) ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு உத்தரவிட்ட நீதவான், அடுத்த வழக்குத் தவணை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .