Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகரில் வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், இக்பால் நகரில் 25 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் இதற்காக ஒருவருக்கு 20,000 ரூபாய் படி 25 பேருக்கு முதற்கட்டமாக காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 15 பேருக்கு இதற்குரிய காசோலைகள் வழங்கப்பட்டன. எஞ்சிய 10 பேருக்கே மூதூர்ப்; பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (16) காசோலைகள் வழங்கப்பட்டன.
பயனாளி ஒருவருக்கு 100,000 ரூபாய் என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்தக் கடன்தொகையை நீண்டகாலக் கடன் அடிப்படையில் பயனாளிகள் மாதாந்தம் கட்டிமுடிக்க வேண்டுமென இவ்வீட்டுத் திட்டத்துக்கு பொறுப்பான காதர் முகைதீன் மன்சூர் தெரிவித்தார்.
49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago