2025 மே 21, புதன்கிழமை

இடைநிறுத்தப்பட்ட அதி சொகுசு பஸ் சேவை மீண்டும்; ஆரம்பம்

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூதூரிலிருந்து கொழும்புக்கான அதி சொகுசு பஸ் சேவை, நேற்று புதன்கிழமை(01) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இச்சேவையை ஆரம்பித்து வைத்தார்.

மூதூரில் இருந்து இரவு 10.30க்கு புறப்படும் கொழும்பு டிப்போவுக்குச் சொந்தமான இந்த பஸ், கிண்ணியா ஊடாக காலை 4.30 மணியளவில் கொழும்பைச் சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 10.30க்குப் புறப்படும் பஸ், கிண்ணியா ஊடாக அதிகாலை 4.30க்கு மூதூரை வந்தடையும்.  

இப்பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததால் மூதூர்,  கிண்ணியா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் சேவை இதற்கு முன்னரும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ஐந்து மாத காலமாக, தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X