2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இடைநிலை சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2021 மே 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூன்றாவது கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் நேற்று (08) திறந்து வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில்  தற்போது ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை, குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை ஆகிய 3 வைத்தியசாலைகளும் கொரோனா இடைநிலை சிகிச்சை  நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

குச்சவெளி கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் பெண்கள் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் கொரோனா தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் திருகோணமலை மாவட்டத்துக்குள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .