Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்,வடிவேல் சக்திவேல்
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கப்பல் சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (26) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, கொழும்பு- தூத்துக்குடி மற்றும் கொழும்பு – கொச்சி ஆகிய இடங்களுக்கு கப்பல் சேவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை- இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே, முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த முதலமைச்சர், 'திருகோணமலையிலிருந்து கப்பல் சேவை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், திருகோணமலையிலுள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைத்து திருகோணமலையிலிருந்து இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்களுக்கு இடமளிக்கலாம்.
விமான நிலையமொன்று செய்துமுடிக்க பாரிய நிதி செலவு செய்யவேண்டியுள்ளது என்பதை விட, திருகோணமலை விமான நிலையத்தின் ஓடுபாதையை சீர்செய்து சுங்கத்திணைக்களம் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக முக்கிய கட்டடங்களை முதலில் கட்டி சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பது கட்டாயத் தேவையாக உள்ளது' என்றார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026