Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், எப்.முபாரக்
திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (19) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி, 03 படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக துறைமுக பொலிஸாரிடம் மறுநாள் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸார் இம்மீனவர்கள் 29 பேரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில், கடந்த 01ஆம் திகதி ஆஜர்படுத்தியதையடுத்து நீதவான் ஈ.சரவணராஜா, இம்மீனவர்களை கடந்த 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டிருந்தார்.
மீளவும் இம்மீனவர்கள், 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது மீண்டும் 25.01.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்ததைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போதே நீதவான் இ.சரவணராஜா இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்.
மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்குமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டார்.
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago