2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய கடல் எல்லையில் சிக்கிய 6 இலங்கையர்கள்

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த  திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன்  ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில்   இந்திய எல்லைப் பகுதியில்  படகு ஒன்று நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டு  படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இலங்கையில்  திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரிய வந்தது.

 இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு  திங்கட்கிழமை (2) மதியம் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில்  விசாரணை நடத்தினர்.

 அதில் அனுரா என்பவருக்குச் சொந்தமான  படகில்  கடந்த 21ம் திகதி  திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்த போது  எல்லை தாண்டி மீன் பிடித்தமை தெரிய வந்தது.

இதையடுத்து மதுஷா,அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .