Editorial / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.அப்துல் ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக், தீஷான் அஹமட்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச்சேனைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று, இன்று (04) அதிகாலை 3 மணியளவில், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ்.எம்.நிஸார்தீன் என்பவருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியே இவ்வாறு முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வீட்டில் வைத்தே இந்த நாசக்கார வேலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியுட்ன சேர்ந்து தளபாடங்கள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களும் தீப்பற்றியுள்ளதாக, முச்சக்கரவண்டி உரிமையாளர், கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு, கிண்ணியா பொலிஸார் சென்று நிலைமையை ஆராய்ந்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago