Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Janu / 2025 ஜூலை 06 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவர் மறைந்த தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
மறைந்த பெருந் தலைவர் இரா.சம்பந்தன் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து உரையாற்றுகையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன். 1933 பிப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்பந்தன் ஆரம்ப கல்வி திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கற்றார். இதனை தொடர்ந்து சூசையப்பர் கல்லூரி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பாடசாலைகளில் கற்று சட்டக் கல்லூரிக்கு 1956 களில் நுழைந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அப்போது புகழ் பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர் ,1977தொகுதி வாரியான தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். மொத்தமாக கடந்த 32 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளதுடன் இன பிரச்சினைகளை தீர்க்க இலங்கை குடியரசின் முன்னாள் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் சுமூகமாக ஈடுபட்டுள்ளதுடன் இந்திய நாட்டு தலைவர்களுடன் திறம்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்
திருகோணமலை என்றால் அது சம்பந்தன் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது . தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இவர் 2015-2018 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.1987இலங்கை இந்திய மாகாண சபை ஒப்பந்தம் வடக்கு, கிழக்கு தொடர்பான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தனது பதவி காலத்தில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் தொடர்புபட்டவர்.
அ . அச்சுதன், ஏ.எச் ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago