Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்
இலங்கைக்கு வருகைதரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க எதிர்க்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இம்ரான் கானின் விஜயம் தொடர்பாக கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் இன்று (09) கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “இலங்கைக்கு வருகைதரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து, இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு உள்ளிட்ட இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித்தருமாறு, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
“எனினும், இதுவரை இது தொடர்பாக சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குக்கூட இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
“பாகிஸ்தான் பிரதமரை எதிர்க்கட்சியினர் சந்திக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என அறையக்கிடைத்தது. ஜனநாயக நாடு என்ற ரீதியில் இம்ரான் கானை சந்திக்க எதிர்க்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்” என்றார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025