2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இரு அடையாள அட்டைகள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூன் 23 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணான்டோ, புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

கேகாலையைச் சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது ) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கேகாலை பகுதியைச் சேர்ந்த இச்சந்தேகநபர், நிலாவெளியிலுள்ள பெண்ணொருவருடன் ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வேளை, நிலாவெளிக்கு சுற்றுலா வந்த கேகாலை பகுதியைச் சேர்ந்த சிலர், இவர் பற்றிய விடயங்களை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியபோது, அங்கு விரைந்த குச்சவெளி பொலிஸார் சந்தேகத்தின் பேரில், அந்நபரைக் கைதுசெய்தனர்.

அவரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிலோர் அடையாள அட்டையில் 1970ஆம் ஆண்டு பிறந்துள்ளதாகவும் மற்றைய அடையாள அட்டையில், 1978ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும் பெயர்களில் சிறியளவில் மாற்றங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கேகாலை மற்றும் கண்டி நீதிமன்றங்களில், பண மோசடி, வாகன மோசடிகள் தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் இவர் 16 திருமணங்கள் செய்துள்ளதாகவும் அதில் 36 பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கள் அறிமுகமில்லாத இடங்களுக்குச்சென்று, அங்கு திருமணம் முடித்து அவர்களுடைய உறவினர்களிடம் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகக் கூறி, பணத்தினை மோசடி செய்துள்ளதாகவும் இவர் தொடர்பில் வழக்குகள் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .