Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு மற்றும் சிவன் கோவிலடிப் பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில் திங்கட்கிழமை (31) இரவு திருட்டுப் போனமை தொடர்பில் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
பேராறு பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின்போது, வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் வீட்டுக்கூரையின் ஓடுகளை கழற்றிவிட்டு உட்புகுந்த திருடர்கள் 30,000 ரூபாய் பணத்தையும் சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதேவேளை, சிவன் கோவிலடிப் பகுதியிலுள்ள வீட்டினுள் உட்புகுந்த திருடர்கள், 20,000 ரூபாய் பணத்தையும் தங்கநகைகளையும் திருடிச்சென்றுள்ளதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026