2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இருவேறு விபத்துகளில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஏ.எஸ்.எம்.யாசீம்,ஆர்.ஜெயஸ்ரீராம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்  இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்; ஏ.எம்.டி.ஐ.பண்டார (வயது 46) மற்றும் அருநேசன் அனஸ்தீன் (வயது 18) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை  பிடிப்பதற்காக வேகமாக சென்றபோது,  முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வானுடன் மோதியதாகவும் அம்மோட்டார் சைக்கிளுடன் சார்ஜன்ட்டினின் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் தெரியவருகின்றது.  இருந்தபோதிலும், பொலிஸ் சார்ஜன்ட் தனது பொலிஸ் பிரிவை தாண்டி உப்புவெளி பொலிஸ் பிரிவில் விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை பேத்தாழை சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த வி.பரசுராமன் (வயது 55) உயிரழந்துள்ள அதேவேளை, இதே இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட கே.கமலநாதன் (வயது 54) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் வாழைச்சேனை  ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரண்டு சைக்கிள்களும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .