Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் பகுதியில் இன்று (05) அதிகாலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மகள் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண், கேணியடி 452/3 எனும் முகவரியில் வசித்துவரும் யோகராஜா யோக அம்பிகை (வயது 68) எனவும் வெட்டுக் காயங்களுக்குள்ளான மகள் யோகராஜா ரத்னகுமாரி (வயது 45) எனவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணும், அவரது உளநலம் பாதிக்கப்பட்ட மகளும், அவர்களது வீட்டின் அறையினுள் உறங்கிக்கொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
தாயின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அவரது மகளையும் சந்தேகநபர்கள் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் மகன், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதாகவும் அதனைக்கொண்டு தாய், அப்பகுதியில் வட்டி வியாபாரம் செய்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து, கொலை செய்யப்பட்டவரின் அயல் வீடொன்றில் வசித்து வரும் தாயும் மகனும் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினத்தன்று கொலைசெய்யப்பட்டவரது வீட்டுக்கு குறித்த அயல் வீட்டுப் பெண் உறங்கச் சென்றதை அயலவர்கள் அவதானித்ததாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
காயங்களுக்குள்ளான மகள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago