2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திம் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்திகரிக்கும்  இயந்திரம் (24) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

கந்தளாய், தம்பலகாமம், சேருவில போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் பெருந்தொகையான மக்கள் தமது பிரதான வைத்தியசாலையாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கந்தளாய் வைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை போன்ற தூர வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.முரளிதரன்,மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X