2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இராஜாங்க அமைச்சர் நாளை விஜயம்

Princiya Dixci   / 2021 ஜூன் 29 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கால்நடை வளங்கள், பால் - முட்டை சார்ந்த தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், திருகோணமலை மாவட்டத்துக்கு நாளை ( 30) காலை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ் விஜயத்நின் போது திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரல தலைமையில் நாளை  காலை 09 மணிக்கு  விசேட கூட்டமொன்று, மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரள உள்ளிட்ட பலர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இக்குழுவினர் இராஜங்க அமைச்சருடன்  காலை 10 மணிக்கு மொறவெவ பகுதிக்குச் சென்று கால்நடை பண்ணைக்கும் 11 மணிக்கு உப்புவெளியில் உள்ள கால்நடை பண்ணைக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X