2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வாகனத்துடன் மோதி கார் விபத்து

Janu   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை -  கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ம் கட்டை சந்தியில் இராணுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் மோதி செவ்வாய்க்கிழமை (02) விபத்துக்குள்ளானது.

தம்பலகாமம் 13ம் கட்டை சந்தி வளைவில் திருப்பிய இராணுவ கெப் ரக வாகனமும் திருகோணமலையில் இருந்து  வந்த காரும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன் இவ் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 ஏ.எச்.ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .