அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 27 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் கெப் வாகனமென்றை மோதி விட்டு நிறுத்தாமல் தப்பிச்சென்ற இராணுவத்துக்குரிய கெப் வாகனமொன்றின் மீது, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி கெப் வாகனம், பொலிஸ் வாகனத்தை மோதி விட்டு நிறுத்தாமல் சென்ற வேளையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
திருகோணமலை 10ஆம் கட்டைப்பகுதியில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு நிறுத்தாமல் செல்வதாக, இராணுவ கெப் வாகனம் தொடர்பில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்தக் கெப் வாகனத்தை, ரொட்டவெவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நிறுத்திய வேளையும், நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது, கெப் வாகனத்துக்குத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், சாலியபுர இராணுவ முகாமுக்குச் சொந்தமான கெப் வாகனத்துக்கே, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ கெப் வாகனத்தின் சாரதியான 48 வயதுடைய இராணுவ வீரர், மதுபோதையில் இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் அவ்வாகனத்தில் ஐவர் பயணித்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சாலியபுர இராணுவ முகாமில் கடமையாற்றும் உயரதிகாரியொருவரே, இவ்வாகனத்தை அனுமதியின்றி திருகோணமலைக்குக் கொண்டு சென்றுள்ளாரெனத் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை, மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago