Princiya Dixci / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான், நேற்று (20) உத்தரவிட்டார்.
புல்மோட்டை, தக்குவா நகர் மற்றும் சதாம் நகர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் புல்மோட்டை பகுதியில்கையடக்கத் தொலைபேசிகள் 3, நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்கள் 3 மற்றும் கடைகளை உடைத்து பொருள்களை திருடியமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்த இவர்களை, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் புல்மோட்டை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
55 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
7 hours ago